சென்னை

மிழகத்தில்  இன்றைய (12/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 6,711 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,40,145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,927 பேர் உயிர் இழந்து 8,80,910 பேர் குணம் அடைந்து தற்போது 46,308 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 2,105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,67,181 பேர் பாதிக்கப்பட்டு 4,332 பேர் உயிர் இழந்து 2,45,751 பேர் குணம் அடைந்து தற்போது 17,098 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 63,808 பேர் பாதிக்கப்பட்டு 700 பேர் உயிர் இழந்து 58,730 பேர் குணம் அடைந்து தற்போது 4,378 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 61,409 பேர் பாதிக்கப்பட்டு 846 பேர் உயிர் இழந்து 56,478 பேர் குணம் அடைந்து தற்போது 4,085 பேர் சிகிச்சையில் உள்ளனர்.