சென்னை

மிழகத்தில்  இன்றைய (06/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 24,898 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,97,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 14,974 பேர் உயிர் இழந்து 11,51,058 பேர் குணம் அடைந்து தற்போது 1,31,468 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 6,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 3,70,596 பேர் பாதிக்கப்பட்டு 5,021 பேர் உயிர் இழந்து 3,32,259 பேர் குணம் அடைந்து தற்போது 33,316 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 90,264 பேர் பாதிக்கப்பட்டு 1,013 பேர் உயிர் இழந்து 78,077 பேர் குணம் அடைந்து தற்போது 11,174 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 88,342 பேர் பாதிக்கப்பட்டு 740 பேர் உயிர் இழந்து 77,757 பேர் குணம் அடைந்து தற்போது 9,845 பேர் சிகிச்சையில் உள்ளனர்.