சென்னை
தமிழகத்தில் இன்றைய (02/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 20,768 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 13,07,112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14,346 பேர் உயிர் இழந்து 10,72,322 பேர் குணம் அடைந்து தற்போது 1,30,444 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 6,078 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 3,45,966 பேர் பாதிக்கப்பட்டு 4,820 பேர் உயிர் இழந்து 3,09,233 பேர் குணம் அடைந்து தற்போது 31,913 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 83,039 பேர் பாதிக்கப்பட்டு 970 பேர் உயிர் இழந்து 72,709 பேர் குணம் அடைந்து தற்போது 8,866 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 81,118 பேர் பாதிக்கப்பட்டு 726 பேர் உயிர் இழந்து 72,709 பேர் குணம் அடைந்து தற்போது 7,683 பேர் சிகிச்சையில் உள்ளனர்.