சென்னை

மிழகத்தில்  இன்றைய (02/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 3,290 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,92,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,750 பேர் உயிர் இழந்து 8,61,424 பேர் குணம் அடைந்து தற்போது 18,606 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1,188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,51,141 பேர் பாதிக்கப்பட்டு 4,256 பேர் உயிர் இழந்து 2,39,724 பேர் குணம் அடைந்து தற்போது 7,161 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 59,529 பேர் பாதிக்கப்பட்டு 694 பேர் உயிர் இழந்து 56,972 பேர் குணம் அடைந்து தற்போது 1,863 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 56,891 பேர் பாதிக்கப்பட்டு 820 பேர் உயிர் இழந்து 54,123 பேர் குணம் அடைந்து தற்போது 1,948 பேர் சிகிச்சையில் உள்ளனர்.