சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2481 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,29,507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 11,183 பேர் உயிர் இழந்து 6,98,820 பேர் குணம் அடைந்து தற்போது 19,504 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 2,01,195 பேர் பாதிக்கப்பட்டு 3,669 பேர் உயிர் இழந்து 1,91,104 பேர் குணம் அடைந்து தற்போது 6422 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 43,999 பேர் பாதிக்கப்பட்டு 683 பேர் உயிர் இழந்து 42,273 பேர் குணம் அடைந்து தற்போது 1,043 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 43,751 பேர் பாதிக்கப்பட்டு 562 பேர் உயிர் இழந்து 41,871 பேர் குணம் அடைந்து தற்போது 1,318 பேர் சிகிச்சையில் உள்ளனர்.