சென்னை

மிழகத்தில்  இன்றைய (11/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 685 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,57,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,535 பேர் உயிர் இழந்து 8,40,723 பேர் குணம் அடைந்து தற்போது 4,344 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 292 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,38,007 பேர் பாதிக்கப்பட்டு 4,174 பேர் உயிர் இழந்து 2,31,893 பேர் குணம் அடைந்து தற்போது 1,940 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 56,298 பேர் பாதிக்கப்பட்டு 685 பேர் உயிர் இழந்து 55,251 பேர் குணம் அடைந்து தற்போது 362 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 53,391 பேர் பாதிக்கப்பட்டு 788 பேர் உயிர் இழந்து 52,243 பேர் குணம் அடைந்து தற்போது 360 பேர் சிகிச்சையில் உள்ளனர்.