சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 173 பேரும் கோவையில் 145 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,280 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,82,137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,833 பேர் உயிர் இழந்து 26,30,654 பேர் குணம் அடைந்து தற்போது 16,650 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 173 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,52,121 பேர் பாதிக்கப்பட்டு 8,513 பேர் உயிர் இழந்து 5,41,773 பேர் குணம் அடைந்து தற்போது 1,835 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 145 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,44,416 பேர் பாதிக்கப்பட்டு 2,369 பேர் உயிர் இழந்து 2,40,454 பேர் குணம் அடைந்து தற்போது 1,593 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,70,120 பேர் பாதிக்கப்பட்டு 2,488 பேர் உயிர் இழந்து 1,66,491 பேர் குணம் அடைந்து தற்போது 1,141 பேர் சிகிச்சையில் உள்ளனர்.