சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 186 பேரும் கோவையில் 224 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,596 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,28,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,094 பேர் உயிர் இழந்து 25,77,646 பேர் குணம் அடைந்து தற்போது 16,221 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 186 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,45,708 பேர் பாதிக்கப்பட்டு 8,419 பேர் உயிர் இழந்து 5,35,455 பேர் குணம் அடைந்து தற்போது 1,834 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 224 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,38,087 பேர் பாதிக்கப்பட்டு 2,288 பேர் உயிர் இழந்து 2,33,634 பேர் குணம் அடைந்து தற்போது 2,165 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,66,354 பேர் பாதிக்கப்பட்டு 2,440 பேர் உயிர் இழந்து 1,62,804 பேர் குணம் அடைந்து தற்போது 1,110 பேர் சிகிச்சையில் உள்ளனர்.