தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

Must read

சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 139 பேரும் கோவையில் 169 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,767 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,52,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 33,966 பேர் உயிர் இழந்து 24,95,895 பேர் குணம் அடைந்து தற்போது 22,188 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,37,386 பேர் பாதிக்கப்பட்டு 8,312 பேர் உயிர் இழந்து 5,27,594 பேர் குணம் அடைந்து தற்போது 1,480 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 169 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,28,504 பேர் பாதிக்கப்பட்டு 2,165 பேர் உயிர் இழந்து 2,24,392 பேர் குணம் அடைந்து தற்போது 1,947 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,61,507 பேர் பாதிக்கப்பட்டு 2,399 பேர் உயிர் இழந்து 1,57,988 பேர் குணம் அடைந்து தற்போது 1,120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

 

More articles

Latest article