சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 126 பேரும் கோவையில் 118 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் இன்று 1,039 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,00,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 36,083 பேர் உயிர் இழந்து 26,52,660 பேர் குணம் அடைந்து தற்போது 11,850 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,54,544 பேர் பாதிக்கப்பட்டு 8,542 பேர் உயிர் இழந்து 5,44,420 பேர் குணம் அடைந்து தற்போது 1,477 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 118 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,46,544 பேர் பாதிக்கப்பட்டு 2,412 பேர் உயிர் இழந்து 2,42,820 பேர் குணம் அடைந்து தற்போது 1,312 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,71,608 பேர் பாதிக்கப்பட்டு 2,503 பேர் உயிர் இழந்து 1,68139 பேர் குணம் அடைந்து தற்போது 966 பேர் சிகிச்சையில் உள்ளனர்.