டெல்லி:
வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான 3வது கட்ட அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து வருகிறார்.
ஏற்கனவே சுயசார்பு பாரதம் என்ற பெயரில் 2 கட்டங்களாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப் பட்ட நிலையில், இன்று 3வது கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டு வருகிறார்.
அதன்படி, விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட 11 துறைகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்படுகின்றன.
இன்று வெளியிடப்படும் 11 அறிவிப்புகளில் 8 அறிவிப்புகள் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்க்காக வெளியிடப்படுகின்றது.
சணல், பருப்பு உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்தியாவில் பெரும்பாலானோர் விவசாயத் துறையைச் சார்ந்தே உள்ளனர். நம்நாட்டு விவசாயிகள் அனைத்துச் சவாலான சூழல்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
பொதுமுடக்கத்தின் போது 2 மாதங்களில் ரூ.74,300 கோடிக்கு உணவு தானியங்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பொதுமுடக்கத்தின் போது விவசாயிகளிடம் இருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பீமயோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு 6,400 கோடி நிலுவை தொகை கொடுக்கப்பட்டுள்ளது.
பிதமரின் கிஷான் திட்டத்தில் ரூ.18,700 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்வதற்கான உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற் காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
இதில், குளிர்பதனக் கிடங்குகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த செலவிடப்படும்.
குறு உணவு நிறுவனங்களை உருவாக்குவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
விவசாயப் பொருள்கள் சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகத்தில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பிட்ட பகுதிகளில் பிரபலமான விவசாய பொருட்களை கண்டறிந்து அவற்றின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக பிரதமரின் மீன்வளத் திட்டத்தில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
கடல், உள்நாட்டு மீன்பிடிப்பு, பண்ணை மீன் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
மீன்பிடி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.9,000 கோடி நிதி ஒதுக்கீடு.
5 ஆண்டுகளில் கூடுதலாக 70 லட்சம் டன் மீன் உற்பத்திக்கு வழிவகை செய்யப்படும்.
கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்துக்காக ரூ.13,343 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
100% கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு.