சென்னை
சென்னை நகரில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை நீடிக்கும் என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று சென்னையில் பள்ளிகளுக்கும், திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னைக்கு மஞ்சள் நில எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை 8.30 மணி வரையிலான காலகட்டத்தில் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் சென்னையைத் தவிர, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய உள்ளதாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.