ஊட்டி
இன்று ஊட்டியில் ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் பல்கல்லைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்குகிரது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் இந்த மாநாட்டை நடத்தி இருந்தார். இந்த ஆண்டுக்கான துணைவேந்தர்கள் மாநாட்டைஇன்றும், நாளையும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆளுந்ர் மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) தலைவர் ஜெகதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதில் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரியர் உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய மனித வளங்களை ஊக்குவித்தல் தொடர்பான விவாதங்கள், விளக்கங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த 2 நாள் மாநாட்டில் எதிர்கால சிறப்பு ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல், புதுமை மற்றும் தொழில் முனைவு, தேசிய சிறப்பு கட்டமைப்பின் மூலம் வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துதல், உலகளாவிய மனித வளங்கள், வளர்ந்துவரும் தொழில்துறை தேவைகளுக்கான ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் போன்ற தலைப்புகளின் கீழ் அமர்வுகளும், உரையாடல் நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. இதில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குனர், ஏ.ஐ.சி.டி.இ. தலைவர், ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் உள்பட பலரும் பங்கேற்று பேச உள்ளனர்.