செஞ்சி

ன்று செஞ்சிக்கோட்டையை யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர்.

செஞ்சிக்கோட்டை.விழுப்புரம் மாவட்டத்தின் அடையாளமாக திகழ்கிறது  மத்திய அரசு 2024- 25 ஆம் ஆண்டில் இந்தியாவில் செஞ்சிக்கோட்டை உட்பட சுமார் 12 இடங்களை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பினருக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் தமிழகத்தில்ல் இருந்து செஞ்சிக்கோட்டை மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இன்று, யுனெஸ்கோ குழுவினர் செஞ்சிக்கோட்டையை பார்வையிட்டு ஆய்வு செய்ய) வர உள்ளனர். குழுவில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை உயர்அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் இடம்பெற்றுள்ளனர். செஞ்சி கூட்டுச் சாலையில் இருந்து செஞ்சிக்கோட்டைக்குச் செல்லும் சாலை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றியும், புதிய சாலையும் அமைத்து அகழியை தூர் வாரி உள்ளனர்.

கோட்டையில் ஆங்காங்கே புதிய பெயர் பலகைகள், கோட்டையின் வரலாற்றை அறிந்து கொள்ள வெண்கலத்தால் ஆன தகவல் பலகை மற்றும் கல்யாண மகாலுக்கு வெள்ளை வண்ணப் பூச்சு அடிக்கப்பட்டு கோட்டை புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது. காலை 9மணியளவில் செஞ்சி கோட்டைக்கு வரும் குழுவினர் பகல் 1 மணி வரை ஆய்வு செய்கின்றனர். பகல் 2மணியளவில் காவல் துறை உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேச உள்ளனர்.

இந்த குழுவினரின் பரிந்துரை அடிப்படையில், செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செஞ்சிக்கோட்டையில் யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு செய்ய உள்ளதால் இன்று பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.