துபாய்
இன்று உலகில் ஐந்தாம் நாடாகச் செவ்வாய் கிரகத்தில் தனது ஆளில்லா செயற்கைக் கோளை ஐக்கிய அரபு அமீரகம் இறக்க உள்ளது.
உலகில் பல நாடுகளும் விண்வெளியில் சாதனைப் புரிந்து வருகின்றன. முதலில் நிலவில் மனிதனை அனுப்பிய சாதனையை அமெரிக்கா புரிந்தது. அதைத் தொடர்ந்து வேறு கிரகங்களுக்கு செயற்கைக் கோள்களை அனுப்பி அங்குச் சோதனை செய்வதில் பல நாடுகள் இறங்கி உள்ளன. அவ்வகையில் ஐக்கிய அரபு அமீரகம் இன்று இரவு தனது ஆளில்லா செயற்கைக் கோளான ஹோப் பிரோப் என்னும் கோளை செவ்வாய்க் கிரகத்தில் இறக்க உள்ளது.
இது அமீரகத்தின் முதல் முயற்சி ஆகும். இதற்காகப் பலவருடங்கள் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு அந்நாட்டு அரசரும் துணை அதிபருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் அக் மக்தூம் இதை அறிவித்தார். இது மிகவும் எளிமையானதாக அமைக்கப்பட்டாலும் சாரித்டிர ளவில் மிகவும் புகழ் பெற்றதாகும். கடந்த 2020 ஆம் வருடம் ஜூலை மாதம் 20 ஆம் தேதி ஜப்பானின் தானெகஷிமா விண்வெளி நிலையத்தில் இருந்து ஹோப் பிரோப் விண்ணில் ஏவப்பட்டது,
சுமார் 7 மாதங்களில் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் புவி ஈர்ப்பு வளையத்தை 49.35 கோடி கிமீ பயணம் செய்து அடைந்துள்ளது. தற்போது அது செவ்வாய் கிரகத்துக்கு மிக அருகில் சென்றுக் கொண்டு இருக்கிறது. இன்று இரவு துபாய் நேரப்படி 7.30 மணிக்குச் செம்மை கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில் இறங்க உள்ளது. இதற்கு சுமார் 27 நிமிடங்கள் ஆகலாம்.
தரை இறங்கும் முன்பு ஹோப் பிரோப் தனது மணிக்கு 1,21,000 கிமீ என்னும் வேகத்தை மணிக்கு 18000 கிமீ எனத் தானாகவே குறைத்துக் கொள்ளும். ஆனால் இந்த நேரத்தில் ஹோப் பிரோப் செவ்வாய் கிரகத்தின் இருண்ட பகுதியில் பயணம் செய்யும் என்பதால் இது கட்டுப்பாடு நிலையத்துடன் தொடர்பில் இருக்காது. ஹோப் பிரோப் வெற்றிகரமாகச் செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது முதல் சிக்னலை பூமிக்கு அனுப்பிய பிறகே மீண்டும் தொடர்பு இணைக்கப்படும்.
இந்த நிகழ்வுக்கு உலகெங்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது இதற்கு முன்பு பல நாடுகள் இதற்காக எடுத்த முயற்சியில் 50% வெற்றி மட்டுமே கிடைத்துள்ளன. செவ்வாயில் செயற்கைக் கோளை இறக்கும் ஐந்தாம் நாடு என்னும் பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெற உள்ளது. மேலும் முதல் முயற்சியிலேயே வெற்றி அடைந்த மூன்றாம் நாடு என்னும் பெருமையையும் அமீரகம் பெற உள்ளது,
செவ்வாய் கிரகத்தில் அமீரக செயற்கைக் கோள் இறங்கும் நிகழ்வினை இன்று https://www.emiratesmarsmission.ae/live/ என்னும் இணைய தளம் மூலம் அனைவரும் காண முடியும்.