கர்தலா

ன்று திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் சகா பதவி ஏற்கிறார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது.  கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்து  முதல்வராக பிப்லப் குமார் தேப் பதவி வகித்து வந்தார்.

திரிபுராவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில், திரிபுரா மாநில முதல்வராக இருந்த பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.   அவர் உள்கட்சி பூசல் காரணமாக ராஜினாமா செய்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் கட்சியை வலுப்படுத்த வேண்டிய பணி இருப்பதால் பதவி விலகியதாக  தேப் கூறினார்.  தற்போது திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் சகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள், தங்களின் சட்டமன்ற குழு தலைவராக சகாவை தேர்வு செய்தனர்.

திரிபுராவின் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சகாவிற்கு முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இன்று காலை 11.30 மணிக்குத் திரிபுராவின் புதிய  முதல்வராக மாணிக் சகா அகர்தலா நகரில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்கிறார்.

முதல்வருடன் புதிய மந்திரிகளும் பதவியேற்று கொள்ள உள்ளனர்சகா பா...வின் நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாகவும் உள்ளார்.  முன்னாள் முதல்வர் பிப்லப் தேப் பதவி விலகியதும் சில மணிநேரங்களில்மாணிக் சகா சட்டசபை தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பல் மருத்துவத் துறையில் பேராசிரியரான 69 வயதுடைய சகா திரிபுராவின் 11வது முதல்வராக பொறுப்பேற்கிறார்.