துரை

ன்று முதல்வர் ஸ்டாலின் மதுரை வருவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை புதுராம்நாட் சாலை, சி.எம்.ஆர். சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜனின் உருவச் சிலையைத் திறந்து வைக்க வருகை தருகிறார்.  எனவே நகரில் இன்று மாலை முதல் இரவு வரை பேருந்துகள், சரக்கு வாகனங்கள், லாரிகள் மற்றும் இதர வாகனங்களின் சாலை போக்குவரத்தில் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது.

விழாவிற்கு  வரக்கூடிய சாலைகளான அனுப்பானடி சாலை சந்திப்பு முதல் புதுராம்நாட் சாலை, சி.எம்.ஆர். சாலை, செயின்ட் மேரீஸ் சந்திப்பு முதல் பழைய குயவர் பாளையம் ரோடு, ஓபுளா படித்துறை முதல் சிமெண்டு சாலை முனிச்சாலை சாலை சந்திப்பு ஆகிய சாலைகளின் வாகன போக்குவரத்து காமராஜர் சாலையினை பயன்படுத்தி கீழ்க்கண்ட வகையில் தங்கள் இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனுப்பானடி  சாலை சந்திப்பிலிருந்து புதுராம்நாட் சாலை மற்றும் சி.எம்.ஆர். சாலை ஆகிய சாலைகள் வ ழியாகச் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தெப்பக்குளம் 16-கால் மண்டபம் சென்று வலதுபுறம் திரும்பி காமராஜர் சாலை வழியாகச் செல்லலாம். செயின்ட் மேரீஸ் சந்திப்பு மற்றும் சிந்தாமணி ரோட்டிலிருந்து பழைய குயவர்பாளையம் வழியாகத் தெப்பக்குளம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் மஹால் சாலை. கீழவாசல் சந்திப்பு சென்று காமராஜர் சாலை தெப்பக்குளம் நோக்கிச் செல்லலாம்.

நெல்பேட்டை மற்றும் ஓபுளா படித்துறையிலிருந்து தெப்பக்குளம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அம்சவள்ளி சந்திப்பு, கீழவாசல் சந்திப்பு சென்று காமராஜர் சாலை வழியாகத் தெப்பக்குளம் செல்ல வேண்டும்.

காமராஜர் சாலையில் கீழவாசல் சந்திப்பு முதல் பழைய கணேஷ் திரையரங்கம் வரை, பழைய குயவர்பாளையம் சாலையில் செயின்ட்மேரீஸ் சந்திப்பிலிருந்து முனிச்சாலை சந்திப்பு வரை போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.