சென்னை
இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி டில்லி செல்கிறார்.
இன்று காலை 3 நாட்கள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிகாரிகள் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 12 ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி செல்ல இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் டில்லியில் இருப்பார் என்றும் அதன் பிறகு சென்னை திரும்புவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.