சென்னை

ன்று தமிழக காங்கிரஸ் எம் பிக்கள் டெல்லிக்க் செல்கின்றனர்.

நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது அப்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

நாளை காலை 11 மணியளவில் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.  கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதால் அவர்கள் இன்று டெல்லி புறப்பட உள்ளனர்.

அப்போது அவர்களுடன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களும் டெல்லி செல்ல உள்ளனர்.  டெல்லி செல்லும் காங்கிரஸ் எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டுள்ளனர்.