சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது..

வரும் 6 ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதே தினத்தன்று கன்யாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடைபெறுகிறது.   இந்த தேர்தல்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இதில் சட்டப்பேரவை தொகுதிகளில் 6183 ஆண்கள், 1,069 பெண்கள், 3 மாற்றுப் பாலினத்தவர் என 7255 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.  நேற்று முன் தினம் நடந்த வேட்புமனு பரிசீலனையில் மொத்தம் 2700க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு மீதமுள்ள வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தவிர கன்யாகுமரி மக்களவை தொகுதியில் 22 ஆண்கள், 1 பெண் என 23 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.  நேற்று நடந்த வேட்பு மனு பரிசீலனையின் போது 10 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 13 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இன்று அனைத்து தொகுதிகளில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி தினம் ஆகும்.   இன்று மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்களை திரும்ப பெற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    அதற்கு பிறகு மாலை சுயேச்சை வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாக உள்ளது.