சென்னை
இன்று மதுரை மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.
”இன்று ஒரு நாள் மட்டும் பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மதுரை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து இன்று இரவு 8.50 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06184) திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்”
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel