பெங்களூரு

ன்று கர்நாடக முதல்வராக சித்தராராமையா பதவி ஏற்க உள்ளார்.

நடந்து முடித கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. நேற்று முன் தினம் அம்மாநில முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் காங்கிரஸ் மேலிடம் தேர்ந்தெடுத்தது. மேலும் வரும் 2024-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் தொடரவும் அனுமதிக்கப்பட்டார்.

பெங்களூரு திரும்பிய சித்தராமையாவை, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக் குழு தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்., சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் நேற்று மீண்டும் டெல்லி சென்று மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து அமைச்சரவை, துறை பங்கீடு ஆகியவை குறித்து சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

அமைச்சரவையில் மூத்த சட்டமன்ற உறுப்பினர்களான பரமேஷ்வர், கே.ஹெச்.முனியப்பா, ராமலிங்க ரெட்டி, ஆர்.வி.தேஷ்பாண்டே, ஹெச்.சி.மகாதேவப்பா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று பகல் 12.30 மணிக்குப் பெங்களூருவில் உள்ள கண்டீரவா திடலில் பிரம்மாண்டமாக நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் சித்தராமையாவுக்கு முதல்வராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக் கிறார்.

பிறகு அவர் டி.கே.சிவகுமாருக்குத் துணை முதல்வராகவும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.  இவ்விழாவில் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றன‌ர்.