சென்னை
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் தொடர்ந்து மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரி களுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. .
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி-கல்லூரி களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.