ஸ்ரீநகர்

ன்று உலகின் உயரமான ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்,

ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் யில்வேயால் கட்டி முடிக்கப்பட்ட ஒரு வளைவான பாலம் முழுக்க இரும்பால் கட்டப்பட்டு இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்ட உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஆகும். இது கடும் நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும்.

காலை 11 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிடுகிம் இப்பாலத்தில் வந்தே பாரத் ரயில் செல்ல உள்ளது, மேலும் கம்பி வழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பகல் 12 மணியளவில் ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

பிறகு, கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடிக்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், அங்கு ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மோடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் செல்வதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

PM Modi, Jammu Kashmir, Worlds highest railway bridge. opening ,