டில்லி

ன்று அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவர் சிலைக்குப் பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இன்று சட்ட மேதை அம்பேத்கரின் 65 ஆம் ஆண்டு நினைவு தினம் நாடெங்கும் அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி நாடெங்கும் பல்வேறு இடங்களில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்குப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.   அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா, மல்லிகார்ஜுன கார்கே,  மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளனர்.

[youtube-feed feed=1]