புதுச்சேரி

ன்று காலை 20 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் சில் கொரோனா பரவலால் புதுச்சேரியில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.   கொரோனா  பரவல் குறைந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்புக்கள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன.  மேலும் நவம்பர் மாதம் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க முடிவு எடுக்கப்பட்டன.

வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் அது தள்ளிப் போடப்பட்டு ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் பள்ளிகளைத் திறக்க கோரிக்கை  விடுத்தனர்.   அதை ஏற்று சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் புதுச்சேரியில் பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளன.  இன்று முதல் 1 முதல் 8ஆம் வகுப்புவரை அரை நேரமும் 9 முதல் 12 வரையிலான வகுப்புக்கள் மற்றும் கல்லூரிகள் முழுநேரமும் இயங்க உள்ளன.

இன்று பள்ளிகள் திறப்பை முன்னிட்டு திருவிழாக் கோலம் பூண்டிருந்த பள்ளிகளில் வெப்பநிலை சோதிக்கப்பட்டு கிருமி நாசினி தரப்பட்டு வகுப்புக்கள் தொடங்கி உள்ளன.  ஒரு சில பள்ளிகளில் முதல்முறையாகப் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் பள்ளி மாணவர்களுக்கான பேருந்துகள் குறித்த பேச்சுவார்த்தை முடிவடையாததால் மாணவர்கள் பேருந்துகளில் தொற்றிக் கொண்டு பயணம் செய்யும் நிலை உள்ளது.   மேலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யாததால் குழந்தைகள் பசியுடன் வீட்டுக்குச் செல்ல நேரிடலாம் எனப் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.