சென்னை

இன்று தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்புக்கு ஏற்ப இந்தியாவில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.   கடந்த 6 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அவ்வகையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்துள்ளது  தற்போது பெட்ரோல் விலை ரூ.90.96 ஆகி உள்ளது.  இதைப் போ இன்று டீசல் விலையும் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.84.16 ஆகி உள்ளது.   இந்த புதிய உச்சத்தைத் தொட்டுள்ள பெட்ரோல் டீசல் விலைகளால் மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

இதையொட்டி மத்திய அரசு கலால் வரியைக் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றன.   ஆயினும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தற்போதைக்கு கலால் வரியைக் குறைக்க எவ்வித திட்டமும் இல்லை என ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.