துரை

லங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பந்தக்கால் இன்று நடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக் கட்டு போட்டிகளில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக அளவில் புகழ் பெற்றதாகும்.   இந்த போட்டியைக் காண உலகெங்கும் இருந்து பலரும் வருவது வழக்கமாகும்.

இந்த வருடத்துக்கான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்க பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.  இந்த நிகழ்ச்சியை ஊர் விழாக்குழுவினர் நடத்தினார்கள்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடி வாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்புப்  பூஜைகள் செய்யப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. இந்த விழாவில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.