
டில்லி,
அடல் பென்சன் யோஜனா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயனை பெறுவதற்கும் இன்று முதல் (ஜன.1) ஆதார் எண்ணை தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அடல் பென்சன் யோஜனா ஓய்வூதியத் திட்டத்தில் பலனைப் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்ணையும் குறிப்பிடும் வகையில் புதிய விண்ணப்ப படிவங்கள் தயாராகி உள்ளன.
இது தொடர்பாக ஓய்வூதிய நிதி ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் அடல் பென்சன் யோஜனா சேவைத்துறைக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், புதிய விண்ணப்பப் படிவங்களில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பயனாளிகளிடம் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel