சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,967 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் உயிரிழப்பு 97 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை உள்பட சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 5967 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்து உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1278 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுஉள்ளது.
இன்று ஒரே நாளில் 6,129 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
இன்று ஒரே நாளில் 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70,023 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 42,76,640 -ஐ கடந்துள்ளது.
இன்று மாலை நிவரப்படி 53,282 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் 70,023 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,611 பேர் ஆண்கள், 2,356 பேர் பெண்கள்.
140 கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.
தமிழக்ததில் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 92 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 5 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கடந்த 23 நாட்களில் தமிழகத்தில் கொரோனாவால் 2,599 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,603 ஆக உயர்ந்துள்ளது.
இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 378 பேரும், திருவள்ளூரில் 376 பேரும், மதுரையில் 338 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,569 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,045 ஆக அதிகரித்தது. இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.