சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் வழக்கத்தை விட வெப்பம் நிலவும் என அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
”தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 20 முதல் 24-ம் தேதி வரைஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும். இன்று தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி பாரன்ஹீட் அளவு அதிகமாக இருக்கக்கூடும்.
இன்று சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் மழைக்கு வாய்ப்பில்லை”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel