டில்லி

ந்தியாவில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து இன்று வல்லுநர் குழு ஆலோசனை நடத்த உள்ளது.

உலகெங்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து பல்வேறு நாடுகள் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளன.  சார்ஸ் கொரோனா மரபியல் ஆய்வாளர்கள் இந்தியாவில் 40 வயதுக்கு மேறப்டோர்ருக்கு பூஸ்டர் கொரோனா டோஸ் செலுத்தப் பரிசீலனை நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் மத்திய அரசு கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தப் பரிந்துரை செய்துள்ளது.   இதையொட்டி இன்று தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப வல்லுநர் குழு டில்லியில் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் அனைவருக்கும் பூஸ்டர்  டோஸ் செலுத்தலாமா அல்லது தேவைப்படுவோருக்கு மட்டும் செலுத்தலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.   இந்தக் கூட்டத்தி  18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் முடிவு எடுக்கப்பட உள்ளது.