all-india-forward-bloc
 
பார்வர்ட் பிளாக் கட்சி தோன்றியது
 அகில இந்திய பார்வர்ட் பிளாக் (All India Forward Bloc) எனப்படும்  தேசியவாத இடதுசாரி கட்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் 1939ல் ஆரம்பிக்கப்பட்டது..காந்திஜி உள்ளிட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் சுபாஷ் சந்திர போசுக்கு எற்பட்ட பல கருத்து வேறுபாடுகள் கரணமாக அக்கட்சியிலிருந்து விலகி போஸ் இந்த புதிய கட்சியைத் துவக்கினார்.
இது மேற்கு வங்காளத்தின்தலைநகர் (கல்கத்தா) கொல்கத்தாவில் துவங்கப்பட்டது. எனினும் தற்போது இக்கட்சியின் தலைமை  அலுவலகம் புது டெல்லியில் உள்ளது. இது ஆங்கிலேய அரசால் 1942ல் தடை செய்யப்பட்டது.1939ல் பார்வார்டு பிளாக் என்ற பெயரில் பத்திரிக்கை ஒன்றும் வெளிவந்தது. இக்கட்சியை போஸ் துவக்கும்போது அவருக்கு தோள் கொடுத்து துணையாயிருந்த முக்கிய தலைவர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் முத்துராமலிங்க தேவர்   ஆவார். அவரே இக்கட்சியின் தமிழ் நாட்டுத்  தலைவராக 1963 வரை இருந்தார்.
இக்கட்சியின் தற்போதைய அகில இந்தியபொதுச் செயலாளர் தேவப்ரத பிஸ்வாஸ். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு என்று வழங்கப்படுகிறது. இக்கட்சிக்கொடியில் புலி சின்னம் இருந்தபோதிலும் இக்கட்சியின் தேர்தல் சின்னம் சிங்கம் ஆகும்.
Raja Harishchandra
இந்தியாவின் முதல் சினிமா படம் வெளியானது
இந்திய சினிமாவின் முதல் முழு நீள திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா 1913-ம் ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது.
இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கபடும் தாதா சாஹேப் பால்கே தனது சொந்தத் தயாரிப்பில் இயக்கி வெளியிட்ட இப்படம் ஒரு ஊமை படமாக இருந்தபோதிலும் 40 நிமிடங்கள் ஓடக் கூடிய அளவுக்கு 4 ரீல்களில் தயாரிக்கப்பட்டிருந்தது. இதில் நடித்தவர்களில் பெரும்பாலோர் மராத்தி நாடக நடிகர்கள். அந்த வரிசையில் இது முதல் மராத்தி படமும்கூட.இது ஊமை படம் என்றாலும் சில இடங்களில் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் சப் டைட்டில்களைகூட அமைத்திருந்தார் பால்கே.. அதனால் உண்மையாகவே ஒரு கற்பனையில்கூட நினைத்திராத ஒரு உலகத்தை இந்தப் படம் அந்தக் காலத்திய ரசிகர்களுக்குக் காட்டியிருக்கும்..
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தப் படத்தின் பிரிண்ட்டில் முதல் ரீலும், கடைசி ரீலும் மட்டுமே புனேயில் உள்ள திரைப்பட ஆவணக் காப்பகத்தில் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறதாம்.. இரண்டு, மற்றும் மூன்றாவது ரீல்கள் கிடைக்கவில்லையாம்.
இந்திய சினிமாவின் துவக்கப் புள்ளியான இன்றைய நாளில் ராஜா ஹரிச்சந்திராவையும், தாதா சாஹேப் பால்கேவையும் மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டியது இந்திய திரையுலகத்தின் கடமை..!
world-press-freedom-logo copy
சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம்
இது ஒவ்வொரு ஆண்டும் மே 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது உலக நாடுகளால் எந்த மாதிரியான தகவல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது, மற்றும் உண்மைகளை வெளியிடுவதில் பத்திரிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் எவை என்பன  போன்றவற்றை விளக்கும் விதமாகவே இந்த பத்திரிகை சுதந்திர தினத்தை மே 3 -ம் தேதி கொண்டாடலாமென்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 1991 ஆம் ஆண்டு அறிவித்தது.
பத்திரிகைச் சுதந்திரத்தின் முக்கியத்துவம் கருதித் தான் நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய தலைவர்கள் “அரசியல் சட்டப் பிரிவு 19-ல் வழங்கியுள்ள ஆறு சுதந்திரங்களில் ஒன்றாக பத்திரிகைச் சுதந்திரத்தையும் சேர்த்திருக்கிறார்கள்” என்பதை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.
இப்போது பத்திரிக்கைச் சுதந்திரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்தும் சட்டங்கள்  எதுவும் இல்லை என்றாலும் சில சமயங்களில் தேவையில்லாமல் பத்திரிக்கைகள் மீது ஆளும் அரசினால் வழக்கு போடுவது நடக்கத்தான் செய்கிறது. என்பதை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும் . அதேவேளையில்  மக்கள் தங்களுக்குத் தேவையான, சரியான, உண்மையான தகவல்களை பெறுவதற்கு வழிகாட்டியாக இருக்கவேண்டிய பொறுப்பு பத்திரிக்கைகளுக்கு உள்ளது.