
புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாள்
1820ம் வருடம் இதே நாளில்தான் பிளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். . இங்கிலாந்து நாட்டில் வசதி மிக்க குடும்பத்தில் பிறந்தாலும், தாதி (நர்ஸ்) படிப்பில் ஆர்வத்துடன் படித்தார். நவீன தாதியியல் முறையை உருவாக்கியவர் இவர்தான்.
தேச உணர்வு கடந்து போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ், ஐக்கிய இராச்சிய மற்றும் ஒட்டோமான் பேரசுப் படைக் கூட்டணிக்குமிடையே 1854 – 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் முதன் முதலில் தனது மருத்துவப் பங்களிப்பை அளித்தார்.
தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை என்று புகழப்பட்டார். . இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.
இன்றைய தினம் உலக செவிலியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel