இஸ்லாமாபாத்: இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மலாலாவுக்கு எளிமையாக  திருமணம் நடைபெற்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் உறுப்பினராக உள்ள அஸருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதை மலாலா உறுதிப்படுத்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

பெண் குழந்தைகளின் கல்வி குறித்து சமூகம் இன்னும் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தி. தனது வரும் இஸ்லாமிய பெண்ணான மலாலா, தலிபான்களின் கொடுங்கோலுக்கு எதிராக குரல் கொடுத்தவர். னைத்து சிறுமிகளின் கல்வியையும் தடை செய்தை எதிர்த்து பேசியதால், தனது 17 வயதில்  பள்ளியிலிருந்து திரும்பி வந்தபோது, துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் சிறுமியின் வாகனத்தை நிறுத்தி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்,  மலாலா கழுத்து மற்றும் தலையில் குண்டு துளைத்தது. மற்றவர்களுக்கோ குறைவான காயங்கள் ஏற்பட்ட நிலையில் மலாலா கடுமையாக பாதிக்கப்பட்டார்.

உலகமே அவருக்கு ஆதரவாக இருந்ததால் சிகிச்சைக்காக அவர் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். அதன் பின்னர் தாக்குதல் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அவரது பிரச்சாரம் மீண்டும்  லண்டனில் இருந்து தொடங்கியது. இப்போது பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்கான அவரது பிரச்சாரம் உலகளவில் உள்ளது.

இந்த நிலையில், அவருக்கு எளிமையானமுறையில் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள மலாலா,  இன்று என் வாழ்வில் ஒரு பொன்னான நாளைக் குறிக்கிறது. அஸரும் நானும் வாழ்க்கைக்கு துணையாக இருக்க முடிச்சு போட்டோம். நாங்கள் எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் ஒரு சிறிய நிக்கா விழாவைக் கொண்டாடினோம். உங்கள் பிரார்த்தனைகளை எங்களுக்கு அனுப்பவும். முன்னோக்கி செல்லும் பயணத்தில் ஒன்றாக நடப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்து உள்ளார்.

மலாலாவுக்கு சமூக இணையதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.