டெல்லி

ன்று காந்தி நினைவிடத்தில் பிரதம்ர் மோடி ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிடோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று  இந்திய விடுதலை இயக்கத்தின் மிக முக்கியமான முகமாக திகழ்ந்த மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டார்.  எனவே தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

எனவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திரு உருவ சிலைக்கு காந்தியவாதிகள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.