திருவனந்தபுரம்
கனமழை பெய்வதால் கேரள மாநிலத்தில் 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்து வருகிறது. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று கேரளாவில் கனமழை தொடர்வதால் 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், இடுக்கி, பாலக்காடு, காசர்கோடு, கோட்டயம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் சனிக்கிழமை வரை கேரள மாநிலத்தில் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளதால் பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.