இன்று: ஜூலை 1 : முதல்வராக இருந்த போதும் மருத்தும் பார்த்தவர்

Must read

download
 திரைப்பாடகர் ஏ.எம்.ராஜா பிறந்தநாள் (1929 )
ஏமல மன்மதராஜு ராஜா என்கிற ஏ. எம். ராஜா தென்னிந்தியாவின்பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு,கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி பிரபலப் பாடகி ஜிக்கி.
இசையார்வம் கொண்ட ஏ.எம். ராஜா கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார் கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கி பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாளம் கண்ட எச்.எம்.வி நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வு செய்தது. அவரே  எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப் பகுதிகளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் அவருக்கு உதவினார். இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. ஒருநாள் பின்னிரவில் அவற்றைக் கேட்க நேர்ந்த ஜெமினி எஸ். எஸ். வாசன் ராஜாவின் குரலால் கவரப்பட்டு தன்னுடைய பலமொழிப்படமான சம்சாரம் திரைப்படத்தில் தலைப்புப் பாடலைப் பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.
ஏ.எம்.ராஜா சில படங்களில் நடித்தும் இருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இருமொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பின்னர் இசைக்கலைஞனைப் பற்றிய படமான ‘பக்க இந்தி அம்மாயி’ படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார். அந்தப்படம் இந்தியில் பாடோசான் என்றபேரில் மறுவாக்கம் செய்யப்பட்டபோது அதில் கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார்.  மேலும் சில படங்களிலும் அவர் நடித்தார்.
இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ல் வந்த “சோபா”. அது ஒரு பெரும் வெற்றிப்படம். 1960ல் வெளிவந்த பெல்லி காணுகா அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பாளராக்கியது. 1959இல் வந்த கல்யாணப்பரிசு இயக்குநர் ஸ்ரீதரின் முதல் படம். அக்காலத்து மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்று அது. தமிழில் இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜாவுக்கும் அதுவே முதல் படம். மேலும் சில படங்களுக்கு அவர் இசையமைத்தார்.
ஏப்ரல் 7, 1989 அன்று ராஜா மறைந்தார்.
 
download (1)
விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிறந்தநாள்( 1961)
கல்பனா சாவ்லா  இந்தியாவின் பஞ்சாபில் பிறந்த அமெரிக்கர் ஆவார். விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிப்ரவரி 1, 2003 இல் ஏழு வீரர்களுடன் STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது விண்கலம் வெடித்து உயிரிழந்தார்.
 
Princess_Diana,_Bristol_1987
வேல்ஸ் இளவரசி டயானா  பிறந்தநாள் (1961)
டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர் ஆகும். இவர், வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி  ஆகியோர். 
இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாக இவர்  கருதப்பட்டார்.   உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம்மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இவர் சாலை விபத்து ஒன்றில் பலியானார்.  இது குறித்த விசாரணை நீண்டகாலம் நடந்து   ஏப்ரல் 2008 இல் தீர்ப்பு வெளியிடப்பட்டது. இதன்படி இவரது மரணம் டயானாவின்  வாகன ஓட்டுனர் சாலை சட்ட விதிகளை மீறியதாலும்,  பப்பராசிகள் செய்கைகளினாலுமே விளைந்தது  எனத் தீர்ப்புக் கூறப்பட்டது.
 
bcroyBadan-roy
மருத்துவர் தினம்
உலகில்  கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் ஒருவர் உண்டு என்றால் அவர் மருத்துவர் தான். டாக்டர்களை போற்றி பாராட்டும்  விதமாக ஆண்டு தோறும் ஜூலை 1ம் தேதி இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
மருத்துவ உலகுக்கு அர்ப்பணிப்புடன் பங்களித்த  டாக்டர் பி.சி.ராய்  பிறந்தநாள் தான் டாக்டர்கள் நாள் ஆக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பீகார் மாநிலம் பாட்னா நகர் அருகே உள்ள பாங்கிபோர் என்கிற சிறிய ஊரில் கடந்த 1882 ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தவர் பிதான் சந்திராராய்.  ஏழை, எளியவர்கள் மேல் அதிக அன்பு கொண்ட அவர் மருத்துவப் பணிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்.
மகாத்மா காந்தியுடன் இணைந்து இந்திய விடுதலைக்காக போராடியவர் இவர்.   இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் டாக்டர் பி.சி.ராய் இருந்தார்.   மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராகவும் சேவையாற்றினார். முதல்வராக இருந்த போது ஏழை மக்ககளுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்து வந்தவர்.தன் வீட்டையே ஏழை, எளிய மக்களுக்கான இலவச மருத்துவமனையாக்கியவர்.
1962 ஆம் ஆண்டு, தான் பிறந்த  ஜூலை 1ம்   தேதியிலேயே மறைந்தார்.  இவரின் பெயரில் 
சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு கடந்த 1976ம் ஆண்டு முதல் டாக்டர் ராய் விருது வழங்கப்பட்டுகிறது.
அமெரிக்காவில் மார்ச் 30ம் தேதியை ‘டாக்டர்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். க்யூபாவில் டிசம்பர் 3 ம் தேதியையும், ஈரானில் ஆகஸ்ட் 23ம் தேதியையும் டாக்டர் கள் தினமாக கொண்டாடுகிறார்கள்.

More articles

Latest article