சென்னை: சம்பளதாரர்கள், வருமான வரிசெலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நீட்டிக்கப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது. நாளை தாக்கல் செய்தால் ரூ 10,000 அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்திற்குள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதில் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, நீட்டிக்கப்பட்ட அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால் பொதுமக்கள் தங்கள் வருமான வரி கணக்கை இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்று இரவுக்குள் வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள், அபராதம் செலுத்த நேரிடும் என்றும், குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று மிரட்டியுள்ள வருமான வரித்துறை, மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு கணக்கை தாக்கல் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.