சென்னை

ன்று கல்லுரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள கலை கல்லூரி மற்றும் கலையியல் கல்லூரிகளில் உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. கடந்த மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

பிறகு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி ஏப்.29லிருந்து லிருந்து மே.15 ஆம் தேதி மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், நாளை மறுநாள் முதல் வருகிற 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது, கீழ்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

  • இணைய வழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன் கடைசி பக்கத்தில் உள்ள சமர்ப்பி பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு எந்த மாற்றமும் ஏற்றுக்கொள்ள இயலாது.

என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.