சென்னை: தமிழ்நாடு முழுவதும்  அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள். இதையடுத்து, விண்ணப்பத்திற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதத்தில் நிறைவுபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள்  மே 6ந்தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து, மாணவர்கள் மேற்படிப்புக்கு சேரும்   அரசு கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்ககான விண்ணப்பதிவு தொடங்கியது.

அதன்படி,  மே 6ந்தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும்,  விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024 முதல் பதிவு செய்யலாம் என்றும் விண்ணப்பத்திற்கான கடைசி நாள் மே 20ந்தேதி  என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில்,. தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்கைக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள் ஆகும்.   அதனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவர்கள் www.tngasa.in – ல் விண்ணப்பிக்கலாம். இதற்கிடையில் கோடை மழை மற்றும் சில காரணங்களால் பல மாணவர்கள் இன்னும் விண்ணப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை கருத்தில்ககொண்டு மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.