அதன்படி இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் , முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை குருவான ஆசிரியர்களுக்கு தெரிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆசிரியர் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்
. இது தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “ஆசிரியர் நாள் வாழ்த்துகள். இளைய தலைமுறையினரை செதுக்கும் ஆசியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
(Best wishes on #TeachersDay, an occasion to express gratitude to all teachers who shape young minds. Tributes to Dr. Radhakrishnan on his birth anniversary. pic.twitter.com/ORfl2iCJat — Narendra Modi) (@narendramodi)
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்! அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு… ஆசிரியர் நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.