சென்னை : இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி சிங்காரவேலர் பிறந்தநாள் இன்று என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இததொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “‘விடுதலைப் போராளி – இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி – ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் பிறந்தநாள்.

தந்தை பெரியாருடன் குடிஅரசில் இணைந்த – பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் அவர்கள்!

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவருக்குச் சிலை அமைத்து, அந்த அலுவலகத்துக்குச் ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மாளிகை’ என்றே பெயரும் சூட்டியவர் நம் தலைவர் கலைஞர்.

இந்தியாவில் முதன்முறையாக மே-1 உழைப்பாளர் நாளைச் செவ்வண்ணக் கொடியேற்றிக் கொண்டாடி, தொழிலாளர் நலனுக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த சிங்காரவேலரின் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்!

இனி வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம்!

இவ்வாறு கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]