கொல்கத்தா

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று நிறைவடைகிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளன.  இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு 30 தொகுதிகளில் கடந்த மார்ச் 27 அன்று நடந்தது.   மேலும் 30 தொகுதிகளுக்கும் வரும் 1 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதைப் போல் அசாம் மாநிலத்திலும்  39 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இங்கும் முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27 அன்று 47 தொகுதிகளுக்கு நடந்தது.   மொத்தமுள்ள  மூன்று கட்ட வாக்குப்பதிவில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த இரு மாநிலங்களிலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது.   தேர்தல் ஆணையக் குழு இந்த தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து வருகிறது.