சென்னை: முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் 7-வது ஆண்டு நினைவு தின​மான ஆக.7-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலைமை​யில் திமுக​வினர் அமை​திப் பேரணி​ சென்றுக்கொண்டிருக்கின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 7வது நினைவுநாளையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்   ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையில் தி.மு.க. சார்பில் அமைதி பேரணி தொடங்கியது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியாக செல்கின்றனர்.

இந்த பேரணி பின்​னர் வாலாஜா சாலை வழி​யாகச் சென்று காம​ராஜர் சாலை​யில் அமைந்​துள்ள கருணாநிதி நினை​விடம் செல்கிறது. அங்கு கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்​வளை​யம் வைத்து அஞ்சலி செலுத்​துகிறார்.

முன்னதாக ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதிநிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,. அங்கிருந்த கருணாநித உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியாக செல்கின்றனர்.