சென்னை

இன்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

இன்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேசுவரர் கோயிலில் தேரோட்டம் நடைபெறுகிறது

இதை ஒட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டும் இன்று (6-6-2025) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் உத்தரவு அளித்துள்ளார்.

இவ்விடுமுறைக்கு ஈடாக வரும் 21.06.2025 (சனிக்கிழமை) கீழ்க்காணும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அவை கங்காதரேசுவரர் மேல்நிலைப்பள்ளி , ELM பள்ளி, MCTM ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, MCTM பெண்கள்மேல்நிலைப்பள்ளி அழகப்பா மேல்நிலைப்பள்ளி , Evarts School , சென்னைமாநகராட்சிபள்ளி ஆகும்.