டிகவேள் எம்.ஆர்.ராதாவின்  நினைவு நாள் இன்று. தமிழ்நாட்டில் செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த தினம் கொண்டாடப்படும் வேளையில் அவரது போர்வாளாக வாழ்ந்து மறைந்த பல்துறை வித்தகர் எம். ஆர். ராதா மறைந்தார். அவரது 43வது நினைவு தினம் இன்று.

நாடக உலகின் கால்பதித்து, திரையுலகை கலக்கிய தனிப்பெரும் கலைஞன் எம்.ஆர்.ராதா. மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் நாயுடுவின் சுருக்க பெயர் தான் எம்.ஆர்.ராதா . மூட நம்பிக்கைகளுக்கு எதிராக,  பகுத்தறிவு கருத்துக்களின் தனது நாடகம், திரைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். எதற்கும் அஞ்சாதவர், எதற்கும் பதில்சொல்ல தயங்காதவர்.

இந்திய ராணுவத்தில் சேர்ந்து முதலாம் உலக போரில் பங்கேற்று தன் உயிரையே இந்திய மண்ணிற்காக அர்ப்பணித்த வீரர் ராஜகோபாலனின் மகனாக பிறந்த ராதா வீட்டிற்கு அடங்காத பிள்ளை. பள்ளி படிப்பிலும் நாட்டமில்லை. சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியே வந்து ஆரம்ப காலத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் போர்ட்டர் வேலை பார்த்தார். அதன்மூலம் கிடைத்த நட்புகளின் மூலம், ஆலந்தூர் அரங்கசாமி நாடகக்குழுவை நடத்தும் அரங்கசாமியின் அறிமுகம் கிடைத்தது. அவரது நாடக்குழுவில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.  ராதாவின் துறுதுறுப்பான சுறுசுறுப்பு காரணமாக, அவரை அரங்கசாமி தனது நாடக்குழுவில் முழுமையான இணைத்து, வேடங்கள் கொடுக்கத் தொடங்கினார்.

முதன்முதலாக நல்லதங்காள் நாடகத்தில் கிணற்றில் வீசப்படும் குழந்தைகளில் ஒரு குழந்தையாக மேடை ஏறினார். அதைத்தொடர்ந்து, பல்வேறு நாடகங்களில் நடத்து, மக்களிடையே வரவேற்பை பெற்றவர், பின்னர் மைசூர் சென்று  சாமு அண்ணா நாடக கம்பெனியில் சேர்ந்து கொண்டார். அங்குள்ளவர்களின் நடவடிக்கை தனக்கு பிடிக்காததால், அங்கிருந்து வெளிறி மீண்டும் தமிழகம் வந்து,  ஜெகநாத ஐயர் கம்பெனியில் சேர்ந்தார்.  அங்குதான் பல புகழ்பெற்ற நாடக திரையுலக கலைஞர்களை உருவாக்கினர். அதே நாடக கம்பெனி தான் எம்.ஆர்.ராதாவின் திறமையையும் செதுக்கியது. இப்படி ஆரம்பித்த அவரின் வாழ்க்கை பல போராட்டங்களுக்கு பிறகு, சினிமா நாடகம் என இரண்டிலும் தனக்கென தனி அடையாளத்தை நிறுவினார்.

அவரது புகழ்பெற்ற  ரத்தக்கண்ணீர் நாடகம் 3021 நாட்கள் அரகேற்றப்பட்டு சாதனை படைத்தார். எம்.ஜி.ஆரை ராமச்சந்திரா என்றும் சிவாஜி கணேசனை கணேசா என்றும் அன்போடும் உரிமையோடும் அழைப்பர். மற்ற நடிகர்களை எல்லாம் மரியாதை இல்லாமல் வாடா போடா என்று அழைப்பது தான் வழக்கம். அது சர்ச்சைக்கும் சொந்தக்காரர்.

என்.எஸ்.கே அவர்களை துப்பாக்கியால் சுடுவதற்காக துப்பாக்கி ஒன்றை வாங்கினார். அந்த செய்தி என்.எஸ்.கேயின் காதுகளுக்கு எட்டவே, அவர் நண்பன் கையால் சாவதில் சந்தோஷம் என்றுள்ளார். அதை கேட்டு மனம் மாறினார் ராதா. ஒரு முறை எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்தில் வைத்து துப்பாக்கியில் சுட்டு தானும் சுட்டுக்கொண்டார் என்ற ஒரு தகவல் உள்ளது. இதற்காக 7 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார்.

பிறகு வெளியில் வந்ததும் நண்பர்கள் இருவரும் துப்பாக்கியை வைத்து விளையாடி கொண்டோம். என்னடா துப்பாக்கி கண்டுபிடிச்சு இருக்காங்க நானும் சாகல, ராமச்சந்திரனும் சாகல எல்லாமே டூப்ளிகேட் என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

எம்.ஆர்.ராதா, ரத்த கண்ணீர், பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை, பாலும் பலமும், பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா, பாவமன்னிப்பு, தாய் சொல்லை தட்டாதே, பெரிய இடது பெண் உள்ளிட்ட 118 படங்களில்  நடித்துள்ளார். குறிப்பாக  1963ஆம் ஆண்டில் மட்டும் 22 படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். அந்த காலக்கட்டத்தில் எம்ஆர். ராதா இல்லாத படங்களே இல்லை என்ற நிலை இருந்தது.

அப்போது திமுகவில் இருந்தவரும், கதை வசன கர்த்தாவுமான மறைந்த மு.கருணாநிதிக்கு, கலைஞர் என அடைமொழி கொடுத்தவர் எம்ஆர்.ராதா.   அரசியல் சர்ச்சைகளுக்கு நடுவிலும் தனது நாடகப் பணிகளை கவனித்து வந்தார் ராதா. 1979ஆம் ஆண்டு வெளிவந்த பஞ்சாமிர்தம் படம் தான் அவர் கடைசியாக நடித்த படம். நாடகம், அரசியல், பிரச்சாரம் என்று இயங்கி வந்த ராதாவின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்து வந்தது. அதன் கூடவே மஞ்சள் காமாலை நோயும் தாக்கவே மிகவும் மோசமானது.

பெரியாரின் போர்வாளாக விளங்கிய எம்.ஆர்.ராதா, பெரியாரின் 100ஆவது பிறந்த நாளான 1979ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி மரணமடைந்தார்.