தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள் ஆடிப்பெருக்கு

Must read

தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள் ஆடிப்பெருக்கு

காவிரி, வைகை, தாமிரபரணி பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கு ஜீவ நதிகளை வணங்கும் நாள் ஆடிப்பெருக்கு நன்னாள். ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆடியில் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து வரும்
ஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்தைத் தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், குடும்பங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று காவிரியில் புனித நீராடுவது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம்.
அன்றைய தினம் அனைவரும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். தங்கம், வெள்ளி வாங்கலாம். ஆடிப்பெருக்கன்று வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
காவிரிக்குப் பலவகை உணவுகளைப் படைத்து மஞ்சள் சரடு, காதோலை கருகுமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் சரடுகளைக் கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் சரடுகளைக் கட்டிக்கொள்வார்கள்.

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் ஏற்பட ஆடிப்பெருக்கு அன்னையை வழிபடுவார்கள். வீட்டில் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் சமைத்து ஆற்றங்கரையோரத்திற்குச் சென்று அன்னைக்குப் படைத்து வழிபட்டு சொந்த பந்தங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள்.

ஆடியில் காவிரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவிரியைக் காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீர்வரிசையுடன் வருவார். புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு யானை மீது வந்து காவிரிக்குக் கொடுப்பார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இந்த பண்டிகை சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.

இன்று ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி கரையோரங்களில் சீர்வரிசைகளை வைத்து காவிரியை வணங்கிச் செல்வ வளம் பெருகவும், குடும்பம் சிறக்கவும் வழிபடுகின்றனர்

More articles

Latest article