download (2)
 
 நெடுஞ்செழியன் பிறந்தநாள் (1920)
தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் “நாவலர்” என்றும் அழைக்கப்படுவார்.
1967ல் அண்ணா தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பணியாற்றினார். தொடர்ந்து கருணாநிதி அமைச்சரவையிலும் இடம் பெற்றார். பிறகு எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவையிலும் பணியாற்றினார்.
அமைச்சர் பொறுப்பில் இருந்த   இரா. நெடுஞ்செழியன் ஒரு முறை ஆய்வுக்காக சிதம்பரம் கோயிலுக்கு  சென்றார். அப்போது   அர்ச்சகர் கொடுத்த பிரசாதத்தை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கையால் கீழே போட்டு விட்டார்.
“அமைச்சரின் வேலை ஆறு மரக்கால் அரிசி சமையல் என்றால் அந்த அளவோடு மட்டும் இருக்கிறதா – அதற்குக் குறைவாகப் போட்டுக் கணக்குக் காட்டுகிறார்களா என்று பார்ப்பது  தான். மற்றபடி  பக்திப் பரவசம் அடைவதல்ல..  சாமி கும்பிடுவதல்ல” என்றார்.
சனவரி 12, 2000 அன்று   நெடுஞ்செழியன்   மறைந்தார்.