சென்னையில் படிப்படியாக குறைந்த கொரோனா பாதிப்பு

Must read

சென்னை

ன்று சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 200க்கும் கீழே சென்றுள்ளது.

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.  இன்று தமிழகத்தில் 671 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,27,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,236 பேர் உயிர் இழந்து 8,08,571 பேர் குணம் அடைந்து தற்போது 6,807 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சுமார் 9 மாதங்கள்: கழித்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 200க்கும் கீழே சென்றுள்ளது,.   இன்று சுமார் 194 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 2% க்கும் குறைவானதாகும்.  இதுவரை சென்னையில் 2,28,169 பேர் பாதிக்கப்பட்டு 4,053 பேர் உயிர் இழந்து 2,22,039 பேர் குணம் அடைந்து தற்போது 2,077 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் கொரோனா பரவல் ஜூன் மற்றும் ஜூலையில் மிகவும் உச்சத்தில் காணப்பட்டது.  அதன் பிறகு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை மீண்டும் சிறிது  உச்சத்தை அடைந்தது.  கடந்த 3 மாதங்களாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து கீழிறங்கி வருகிறது.  இன்றைய பாதிப்பு 200க்கும் கீழிறங்கி 194 ஆகி உள்ளது.

More articles

Latest article